தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் !

தூத்துக்குடி, ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை, மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்துடன் இணைந்து, “கடந்த காலத்தை மீளாய்வு செய்தல்: வரலாற்று ஆய்வுகளில் சமகால அணுகுமுறைகளும் வளர்ந்து வரும் போக்குகளும் “ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை அக்டோபர் 06 இன்று செவ்வாய்க்கிழமை நடத்தியது.

கல்லூரி முதல்வர் முனைவர்.பழநி வாழ்த்துரை வழங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர்.சங்கீதா வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கருத்துரையாளராக பேராசிரியர் சாந்தினி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை),
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அப்துல்அசீஸ், வள்ளியூர், மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர்.சிலுவை சாந்தா பிரின்ஸ் மற்றும் கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆனந்த குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் மனிதநேயம், தொல்லியல், பாரம்பரியப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, வாய்மொழி வரலாறு மற்றும் பாலின ஆய்வுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் வரலாற்றியல் ஆய்வுத் துறைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

130க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிறைவாக,பூர்ணிமா திலகம் வரலாற்று துறை உதவிப் பேராசியர் அவர்கள் நன்றியுரை நல்கினார் .
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வரலாற்று துறைத் தலைவர் மற்றும் பேராசியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.













