கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் இன்டெர்னல் குவாலிட்டி அஸுரன்ஸ் செல் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் இன்டெர்னல் குவாலிட்டி அஸுரன்ஸ் செல் சார்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது !

 

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் இன்டெர்னல் குவாலிட்டி அஸுரன்ஸ் செல் சார்பாக “விழிப்புடன் இருப்போம்; பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துவோம்” என்ற கருத்தை மாணவர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கருத்தரங்கம் காலையில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கும் மற்றும் மாலையில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் நடைபெற்றது.

 

கல்லூரி முதல்வர் முன்னிலை வகித்தார். கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவரும், சென்னை கே7 எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அருண் கலந்து கொண்டு “இணையப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

 

அவர் தனது உரையில் மாணவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திறமையானவர்களாக இருப்பதுடன், இணையப் பாதுகாப்பிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வலுவான கடவுச்சொல், OTP பாதுகாப்பு, தனியுரிமைப் பாதுகாப்பு, ஃபிஷிங் மற்றும் ஆன்லைன் மோசடிகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படை சைபர் பாதுகாப்பு நடைமுறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். ‘பாதுகாப்பான இணையப் பயன்பாடு என்பது ஒவ்வொரு மாணவரின் பொறுப்பு’ என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என எடுத்துரைத்தார்.

 

சிறப்பு விருந்தினரை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி லோகிதா அறிமுகம் செய்து வைத்தார். இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி அனிஷா வரவேற்புரையும், முதுகலை முதலாம் ஆண்டு மாணவி கீதா நன்றியுரையும் வழங்கினர். நிகழ்ச்சியை முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் அழகுசிவா மற்றும் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் ராஜா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி, முதல்வர், கணினி அறிவியல் துறைத்தலைவர், இன்டெர்னல் குவாலிட்டி அஸுரன்ஸ் செல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.