கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி : கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை !

கல்லூரிகளுக்கு இடையிலான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி :
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை !

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி கோவில்பட்டி, கிருஷ்ணா நகர், செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 22-09-2026 அன்று நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. மாவட்ட அளவிலான ஹாக்கி இப் போட்டியில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது.

இரண்டாம் இடம் பிடித்த கே.ஆர். கல்லூரி அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரொக்கப் பரிசு ரூ.36,000/- வழங்கப்பட்டது.

தடகளப் போட்டி :

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி 30-09-2026 அன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டும் போட்டியில் மாணவர் மாதேஷ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூ.3,000/-ம், மாணவி விஜிதா நீளம் தாண்டும் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் ரூ.3,000/-ம், பெற்றனர். மாணவி விஜிதா மற்றும் மாணவர் மாதேஷ் ஆகிய இருவரும் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வட்டு எறிதல் போட்டி :

வட்டு எறியும் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று மாணவர் சந்தீப் குமாருக்கு ரூ.1,000/- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்பட்டது.

பளு தூக்கும் போட்டியில் முதலிடம் :

பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 03-10-2026 அன்று நடை பெற்றது. இதில் மாணவி செண்பகவல்லி 69 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 82 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 98 கிலோ என மொத்தம் 180 கிலோ எடையைத் தூக்கி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார் . அவருக்கு ரூ.3,000/- ரொக்கப் பணமும்,60 கிலோ எடை பிரிவில் மாணவர் சுபாஷ் ஸ்னாட்ச் (snatch) 89 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 110 கிலோ என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூபாய் 3,000/- ரொக்கப் பணத்தை பெற்றார்.

முதலிடம் பிடித்த மாணவி செண்பகவல்லி மற்றும் மாணவர் சுபாஷ் ஆகியோர் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மேலும் மாணவி தங்க தர்ஷினி 53 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 48 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 52 கிலோ என மொத்தம் 100 கிலோ எடையைத் தூக்கி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று ரூ.2,000/-ம், மற்றும் மாணவி மாலதிகா 49 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ச் (snatch) 37 கிலோ மற்றும் ஜெர்க் (Jerk) 35 கிலோ என மொத்தம் 72 கிலோ எடையைத் தூக்கி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று ரூ.2,000/-ம் பெற்று அடுத்தடுத்து சாதனை செய்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணைதலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டினர்.