அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது!

அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது!

 

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, கணிதவியல் துறை மற்றும் இந்தியக் கணக்கியல் சங்கம் (ஐ.ஏ.ஏ.) ஆகியவை இணைந்து “இந்தியாவில் நிதித் தொழில்நுட்பமும் நவீன டிஜிட்டல் பொருளாதாரமும்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாட்டை 29.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று நடத்தின.

 

வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர் முனைவர் டேவிட் வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர். அலோசியஸ் மரியா பென்சிகர் தலைமையுரையாற்றினார். முதல்வர் முனைவர்.தாசப்பன் மற்றும் பொருளாளர் அருட்தந்தை கிரேஸ் குணபால் வாழ்த்துரை வழங்கினர்.

கணிதவியல் துறைத் தலைவர் முனைவர். இஷியா மஞ்சி மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். முனைவர்.பார்வதி மற்றும் முனைவர்.சுகந்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.

 

தொடர்ந்து நூல் வெளியீடும், இந்தியக் கணக்கியல் சங்கம் மற்றும் கல்லூரியின் வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (எம்.ஓ.யூ.) நடைபெற்றது. தஞ்சாவூர் இந்தியக் கணக்கியல் சங்கக் கிளைச் செயலாளர் முனைவர்.ஜெகன் தொடக்க உரையாற்றினார். முனைவர். சார்லஸ் டயானா நன்றியுரையாற்றினார்.

 

தொழில்நுட்ப அமர்வு

பெங்களூரு ஐ.எஸ்.பி.ஆர். கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ராஜேஷ் மாநாட்டுத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது ஆய்வுக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்கள் பெறப்பட்டன. அறிவுப் பகிர்வு மற்றும் பயனுள்ள கல்விசார் கலந்துரையாடல்களுடன் மாநாடு நிறைவடைந்தது.

இம்மாநாடு நிதித் தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் நவீன டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த அறிவையும் புரிதலையும் மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.