முதலமைச்சர் கோப்பை :
மாவட்ட அளவிலான போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டியில் அபாரம்!
செப்டம்பர் 17,18 – 2026 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வ.உ.சிதம்பரம் கல்லூரி கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் (Runners-up) பெற்று பெருமை சேர்த்துள்ளது.
17.09.2026 அன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில், வ.உ.சிதம்பரம் கல்லூரி கைப்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியிலும் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.












