தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு சிறப்பு காட்சிப்படுத்தல் நிகழ்ச்சி !

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு சிறப்பு காட்சிப்படுத்தல் நிகழ்ச்சி !

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை சார்பில், “ROOTS OF TAMIL NADU – Celebrating Indigenous Heritage” என்ற தலைப்பில் பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சிறப்பு காட்சிப்படுத்தல் நிகழ்ச்சி 29 ஆகஸ்ட் 2006 நடைபெற்றது.

உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பழங்குடியின சமூகங்களின் வாழ்வியல், பாரம்பரிய உடைகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், தொழில்கள், உணவுமுறைகள் மற்றும் இயற்கையுடனான நெருங்கிய தொடர்பு ஆகியவை மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டன.

பல்வேறு பழங்குடியின சமூகங்களை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்காரங்களுடன் நிலைக்காட்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு காட்சிக்கும் அந்தந்த சமூகத்தின் சிறப்புகள் மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் சிறு அறிமுகமும் வழங்கப்பட்டது. மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் நேர்த்தியான காட்சிப்படுத்தல், பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு, பண்பாட்டு அடையாளம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மேலும், அழிந்து வரும் பாரம்பரியங்களையும் பழங்குடியின மக்களின் தனித்துவமான பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது.

மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்த ஒரு சிறந்த அனுபவக் கற்றல் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வாக இத்தொகுப்பு அமைந்தது. தாவரவியல் துறையின் இம்முயற்சி, தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களின் வளமான பாரம்பரியத்தை அறிந்துகொள்ளவும், அவர்களின் பண்பாடு மற்றும் இயற்கை சார்ந்த வாழ்வியலை மதிக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்தது.