11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச நவீன மிதிவண்டி திட்டம் : மின் ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு !

11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச நவீன மிதிவண்டி திட்டம் :
மின் ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு !

Oplus_131072

தமிழக அரசு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை 2005-2006 கல்வியாண்டு முதல் விரிவுபடுத்தி வழங்கி வருகிறது.

இத்திட்டம் முதன் முதலில் 2001-2002 கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்காகத் தொடங்கப்பட்டது.

Oplus_131072

பின்னர் 2005-2006 கல்வியாண்டு முதல் இத்திட்டம் அனைத்துப் பிரிவு (அனைத்துச் சமூகப் பிரிவு) மாணவ மற்றும் மாணவியருக்கும் நீட்டிக்கப்பட்டது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு (பிளஸ் 1) பயிலும் மாணவர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) மற்றும் குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன இலவச சைக்கிள்களை வழங்குவதற்காக, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் மின்-ஒப்பந்தப் ( E – Tenders ) புள்ளிகளை கோரியுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 5.32 லட்சம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.

புதிய வசதிகள்:

இந்த முறை வெறும் சைக்கிள் மட்டுமின்றி, மாணவர்களின் பாதுகாப்பிற்காக தலைக்கவசம் (Helmet) மற்றும் ஒரு குடிநீர் பாட்டில் (Water Bottle) ஆகியவை இணைத்து நவீன வடிவில் வழங்கப்படும்.

விநியோகக் காலம்: டெண்டர் எடுக்க உள்ள நிறுவனங்கள், கொள்முதல் ஆணை (Purchase Order) பெற்ற 150 நாட்களுக்குள் சைக்கிள் மற்றும் உபகரணங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

டெண்டர் முக்கிய தேதிகள் :

டெண்டர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தொடக்க நாள் இன்று ஆகஸ்ட் 29 முதல்.

ஆன்லைன் டெண்டர் சமர்ப்பிக்க கடைசி நாள்:

செப்டம்பர் 28 மாலை 3:00 மணி வரை.

மாதிரி சைக்கிள்கள் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாணவ மற்றும் மாணவியருக்கான வழங்க இருக்கும் தலா ஒரு மாதிரி மிதிவண்டியை (Sample Bicycle) செப்டம்பர் 28 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

  • இந்த டெண்டர் தொடர்பான ஆன்லைன் ஆவணங்களை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு அரசு மின்-ஒப்பந்தப் புள்ளி இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.