கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் இந்தி தேர்வுகள் நடைபெற்றது !

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் இந்தி தேர்வுகள் நடைபெற்றது !

மகாத்மா காந்திஜியால் தென்னக மக்களுக்கு நமது தேசிய மொழியாகிய இந்தியை பயிற்றுவிக்கும் நோக்கத்தில் சென்னையில் தட்சிண பாரத் இந்தி பிரச்சாரசபா ஆரம்பிக்கப்பட்டு; வருடத்துக்கு இரண்டுமுறை இந்தி தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் எங்கள் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோவில்பட்டி மற்றும் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தி படித்த மாணவர்கள் 08.08.2026 மற்றும் 09.08.2026ல் நடைபெற்ற தேர்வில் 396 தேர்வாளர்களும், 16.08.2026 நடைபெற்ற தேர்வில் 687 தேர்வாளர்களும் ஆக மொத்தம் 1083 தேர்வாளர்கள் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் இந்தி தேர்வு எழுதினார்கள்.

மேலும் இத்தேர்விற்கு கோவில்பட்டியை சுற்றியுள்ள ஊர்களான இளையரசனேந்தல், திருவேங்கடம், காமநாயக்கன்பட்டி. ஊத்துப்பட்டி, பசுவந்தனை, கடம்பூர், எட்டையாபுரம், விளாத்திகுளம், நாலாட்டின்புத்தூர், கழுகுமலை மற்றும் சாத்தூர் ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதினார்கள்.

பள்ளித்தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் மற்றும் பள்ளிநிர்வாகி ஜெயபிரியா அய்யனார் தேர்வு மையத்தை பார்வையிட்டு தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தேர்வுகளின் கண்காணிப்பாளர் பள்ளித்தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் குழுவினர் தேர்வுகளை நடத்தினார்கள்.