கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக தென்னிந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். சாமுவேல் செல்லையா மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் நாட்டு நல பணி திட்டம் சார்பாக விக்சித் பாரத் சங்கல்பான் ஜென்சி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பேசுகையில் 2047 இல் தன்னிறைவு பெற்ற வல்லரசு இந்தியா உருவாக இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்றும் போதை இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்றார். இந்த காணொளி நிகழ்வில் இந்தியா முழுவதும் 125 பள்ளி கல்லூரி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடம்பெற்று நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) ஜெயா அனுமதியுடனும் வழிகாட்டுதலின் படியும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நூலக அலுவலர் மேரி, கடையநல்லூர் நூலக நூலகர் நாகராஜ், வாசகர் வட்ட தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆங்கிலத் துறை தலைவர் முனைவர்.ராம்சங்கர் முன்னிலை வகித்த்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு போதை ஒழிப்பு சம்பந்தமாக பல விழிப்புணர்வு காணொளி காட்டி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

அதன் பின்னர் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் செய்திருந்தார். அவருடன் இணைந்து கணினி அறிவியல் துறை சார்ந்த முனைவர்.மீனாட்சி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.