கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை !

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக 33வது பட்டமளிப்பு விழா 28-07-2026 அன்று நடைபெற்றது.

இதில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவி லதிக்க்ஷா சங்கர், முதுகலை கணினி அறிவியல் துறை மா‌ணவி பூஜா மற்றும் இளங்கலை வணிகவியல் (தொழிற்சார் கணக்கு வைப்பு முறை) துறை மாணவி துர்கா தேவி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமாகிய மேதகு ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

தங்கப்பதக்கம் பெற்றுள்ள மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணை தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.