கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு – விழிப்புணர்வு கருத்தரங்கம் !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு – விழிப்புணர்வு கருத்தரங்கம் !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு அமைப்பு (Anti Drug Club) மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) சார்பாக புகையிலை, போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அறிமுகவுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் இனநல பெரியார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகளைப் பற்றி மாணவர்களிடையே கருத்துரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில், போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், சட்டரீதியான விளைவுகள், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தற்கொலை எண்ணங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

முதுநிலை இரண்டாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி கெத்தியால் நிஸ்ஸிராஜ் வரவேற்புரையும் மேக்தலின் ஃபெபி நன்றியுரையும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், போதை ஒழிப்பு அமைப்பு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.