தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கணிதத்துறை இணை பேராசிரியர்கள் எழுதிய நூலை கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வெளியிட்டார்:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கணிதத்துறை இணை பேராசிரியர்கள் எழுதிய நூலை கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வெளியிட்டார்:

தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரி, கணிதத் துறையைச் சேர்ந்த முனைவர். மீனாட்சி சுந்தரம் மற்றும் முனைவர் வாணி எஸ்.வி. ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “A Journey Through Group Theory and Its Applications” என்ற நூலை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு இன்று (17.7.2026) வெளியிட்டார்.

குழுக் கோட்பாட்டின் (Group Theory) சமச்சீர் (Symmetry), அமைப்புகள் (Structures), தொடர்புகள் (Connections) மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகளை (Real-world Applications) விரிவாக விளக்கும் இந்நூல், கணித மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த பயனுள்ள கற்றல் வளமாக அமையும்.
இந்நூலை எழுதியுள்ள இரு ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.