தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம்!
தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி. எம் கல்வி கற்பித்தலோடு, மாணவியரின் உடல்நலனில் அக்கறைக் கொண்டும் செயல்படுகிறது,அதற்கென்று ஐந்துப் பேராசிரியர்களை உள்ளடக்கிய “மகளிர் மேம்பாட்டு குழுவினை” (WOMEN EMPOWERMENT) சீரும் சிறப்புமாகச் செயல்படுத்திவருகிறது.
இக்குழுவானது ஆண்டுத்தோறும் கல்லூரி மாணவிகள் உடல் நலனில் அக்கறைக் கொண்டு, மகளிர்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும், மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும், மகளிர் நல மேம்பாட்டு கருத்தரங்கினை 15.07.2026 அன்று, காலை 11.30 மணி அளவில் கல்லூரிக் கலையரங்கத்தில் இறைவாழ்த்தோடும், தமிழ்த்தாய் வாழ்த்தோடும் அரங்கேற்றியது.

இந்நிகழ்வின் தொடக்கமாக, வரவேற்புரையை முனைவர்.நீதா, இணைப்பேராசிரியர் ஆற்றினார். கல்லூரி முதல்வர்.முனைவர்.பழனி நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி, பொருநை மருத்துவமனை, பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் கிருஷ்ணவேணி, மாணவிகளுக்கு உடல்நலம் குறித்தும், சரிவிகித உணவு, நல்ல தூக்கம், ஹீமோகுளோபின் அளவு. மாதசுழற்சி, தடுப்பு ஊசி, உடற்பயிற்சி இவை பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணவிகளின் ஐயங்களுக்கு விடையளித்தார்.
இக்கருத்தரங்கானது, மாணவிகளுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வைத் தந்தது.தொடர்ந்து,ஆங்கிலத்துறைப் பேராசிரியர் மிஸ்டிகா நன்றி நவின்றார், இக்கருத்தரங்கினை “மகளிர் மேம்பாட்டுக் குழுப்” பேராசிரியர்கள் நடத்தினர். தேசிய கீதத்தோடு நிறைவுப் பெற்றது.












