தூத்துக்குடியில் ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின் பீஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் தான விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது!
தூத்துக்குடியில், ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின் பீஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், சர்வதேச மனிதக் கடமைகள் தினத்தை முன்னிட்டு, கண்தான விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் பாலசுபா சென் தலைமை வகித்தார். முன்னாள் தலைலர் அஜிதா பிரபு,செயலர் ஸ்ருதி , திட்ட இயக்குநர் பொன்நிலா சிறப்பாக திட்டமிட்டு ஒருங்கிணைத்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட டாக்டர்.ராஜ்குமார் தர்மராஜன் கண்தானத்தின் அவசியம் குறித்தும், ஜேசிஐ மண்டல அதிகாரி விவேக் சமூக சேவையின் அவசியம் குறித்தும் பேசினர்.
ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின் பீஸ் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்தானத்துக்கு விருப்பம் தெரிவித்து, அதிகாரப்பூர்வ ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட்டு தங்களது உறுதிமொழியை பதிவு செய்தனர்.
இதையடுத்து கண்தானத்துக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்த அனைவருக்கும் ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின் பீஸ் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் யுவராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் கண்பரிசோதனை செய்தனர்.
முகாமில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர்கள் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
நிகழ்வில், ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின் பீஸ் உறுப்பினர்கள் புவனேஸ்வரி, மதுமதி, சரண்யா, மனோகரி, சோபியா , இந்து, கார்த்திகா, தனுஜா, ஜனார்த்தனன், இளங்கோ, ஸ்ரீதரன், ஜெய் ஸ்ரீ ராஜ பிரபு, செண்பகராஜன், தாளமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












