தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மின்னணுக் கழிவுகளை அகற்றும் “E – Bin” திட்டம் அறிமுகம்! கனிமொழி கருணாநிதி எம்.பி., மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மின்னணுக் கழிவுகளை அகற்றும் “E – Bin” திட்டம் அறிமுகம்!
கனிமொழி கருணாநிதி எம்.பி., மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்:

தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரி, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) , மற்றும் யங் இந்தியன்ஸ் (Yi), நிறுவனத்துடன் இணைந்து, மின்னணுக் கழிவுகளை (E-Waste) பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான “E-Bin” திட்டத்தை இன்று (10.7.2026)அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்ச்சி, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்த்தல், நிலைத்தன்மை மிக்க சுற்றுச்சூழலை உருவாக்குதல், மற்றும் எதிர்கால தலைமுறைக்கான பசுமையான உலகை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை ஏற்றுதொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு சிறப்புரை யுள் நடைபெற்றது.