கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி:
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.07.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பெண் “குழந்தைகளை காப்போம் மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வர் முனைவர்.பிரபு தொடக்கி வைத்தார். பேராசிரியர் முனைவர். லாவண்யா வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் காந்திமதி பெண்கள் சமுதாயத்தில் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அப்பிரச்சனையிலிருந்து எவ்வாறு தன்னை தற்காத்து கொள்வது என்பது பற்றியும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், வழக்கறிஞர் விஜயகுமார் மக்களுக்கான அடிப்படை உரிமை பற்றியும் பெண்களுக்குன்டான பல்வேறு சட்டங்கள் குறித்தும், அச்சட்டம் எவ்வாறு பயன்படுகின்றது என்பது பற்றியும் உரையாற்றினார்.

மேலும் சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா ஆண்,பெண் இருவருக்கும் சுய ஒழுக்கம் மிக அவசியம் என்பதை சிறு சிறு கதையின் மூலம் மாணவர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மற்றும் நிதி சார் கல்வி நிபுணர் ஜெயலட்சுமி , முருகப்பெருமாள் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்து பெருமை சேர்த்தனர்.
மேலும், மாணவிகளுக்கு பெண் கல்வி குறித்து. ஓவிய போட்டி மற்றும் நாடகப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக, பேராசிரியர் வரதராஜம்மாள் நன்றியுரை கூற நாட்டுப்பண்னுடன் விழா முடிவடைந்தது.













