10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியிடப்பட்டது!
அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு!
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க ஜூன் மாதம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி ஜூன் 25-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிவடைந்தது. தற்போது மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று (ஜூலை 6) பிற்பகல் வெளியிடப்பட்டது.

விடைத்தாள் நகல் பெற்று விண்ணப்பித்த 8,682 தேர்வர்கள் தங்கள் திருத்தப்பட்ட மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மொத்த விண்ணப்பங்கள்:
மறுகூட்டலுக்கு 751 பேரும், மறுமதிப்பீட்டிற்கு 7,931 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
முடிவுகளைப் பார்ப்பது எப்படி:
தேர்வர்கள் மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வாயிலாக தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைக் காணலாம்.












