கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிஎண்: 132 மற்றும் சமவாய்ப்பு மன்றம் (Equal OpportunitiesCell)இணைந்து உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சியை 12.06.2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

“குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் – கல்வியால் எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.மதிவண்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் குழந்தைத் தொழிலாளர்களின் நிலை, கல்வியின் அவசியம், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டங்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் மாணவர்கள, பேராசிரியர்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணித்திட்ட அணிஎண்:132, சமவாய்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.














