தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு !
தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை படை மாணவிகள் தலைமையாசிரியர் அருள் சகோதரி சகாய ஹேமலதா ஜெயந்தியிடம் மரக்கன்றுகளை கொடுத்து சிறப்பித்தார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நாக பிரதிஷா சொற்பொழிவு ஆற்றினார். பதினோராம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி சுற்றுச்சூழலைப் பற்றிய பாடல் பாடினார். அதன் பிறகு தலைமை ஆசிரியர், தையல் ஆசிரியை அருள் சகோதரி சுகிர்தா மற்றும் பசுமை படை ஆசிரியர் ஆனந்தி மற்றும் மாணவிகளும் இணைந்து மரக்கன்றுகளை நட்டினார்கள்.

அதன் பின் மாணவிகள் அனைவரும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வீர முழக்கத்துடன் உறுதிமொழி எடுத்தனர். அதன் பிறகு தலைமை ஆசிரியர் பல்வேறு கருத்துகளை கூறிய பின் பொறுப்பாசிரியர் ஆனந்தி, மற்றும் மாணவிகளால் தான் நம் பள்ளியில் பசுமை படை எப்போதும் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் என்று பாராட்டினார்கள்.












