தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மே மாத சம்பளம் நாளை ( மே 29 ) வங்கி கணக்கில் வரவு : தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மே மாத சம்பளம் நாளை ( மே 29 ) வங்கி கணக்கில் வரவு :
தமிழக அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் நாளை 29 மே, 2026 வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த மாத ஊதியத்துடன் பின்வரும் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகிறது.

1.அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.

2.மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) அதனுடன் இணைத்து வழங்கப்படும்.

புதிய அரசின் செயல்பாடுகள்:

மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மே மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும், மே மாத சம்பளம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையில்,     தமிழ்நாட்டில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், மேலும் சுமார் 7 லட்சம் பேர் ஓய்வூதியதார்கள்,குடும்ப ஓய்வூதியர்கள்  ஆகியோருக்கு வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக நாளை மே 29 தேதி சம்பளத்தை புதிய அரசு வழங்குவது குறிப்பிடத்தக்கது.