NEET UG 2026 தேர்வு : 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு: நேரம் போதுமானதாக இருந்தது ,தேர்வு ஆவரேஜ் ஆக இருந்ததாக மாணவர்கள், கருத்து!

NEET UG 2026 தேர்வு : 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு:
நேரம் போதுமானதாக இருந்தது ,தேர்வு ஆவரேஜ் ஆக இருந்ததாக மாணவர்கள், கருத்து!

NEET UG 2026 தேர்வு இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் . மேலும் பலத்த பாதுகாப்பு மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களுடன் நடைபெற்றது.

தேர்வு வாரியத்தின் தகவல்படி, நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வெழுதப் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS) மற்றும் அது சார்ந்த மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முக்கிய மற்றும் பெரிய நுழைவுத் தேர்வாக நீட் இருந்து வருகிறது.

நீட் தேர்வு 2026, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரே ஷிப்டாக, ஆஃப்லைன் (Pen-and-paper) முறையில் நடைபெற்றது. தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்றும், மதியம் 1:30 மணிக்குப் பிறகு மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு அதன்படி அனுமதிக்கப்பட்டனர்.

வினாத்தாளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் கேட்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்தபடி, தேர்வு நாளில் பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்கள் அமலில் இருந்தது. தேர்வர்கள் தங்களின் நீட் 2026 ஹால் டிக்கெட் (Admit card), முறையான அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கண்டிப்பாகக் கொண்டு வந்து அடையாளத்தை உறுதிப்படுத்தி தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நடத்தப்பட்டது .மேலும், என்.டி.ஏ விரிவான ஆடை கட்டுப்பாடுகளையும் விதித்தது.

இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு சீராகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யப் பெருமளவிலான கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த ஆண்டு மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வினாத்தாள் கசிவு குறித்த வதந்திகளைத் தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளதோடு, தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் சோதனைகள் மற்றும் பயோமெட்ரிக் முறைகள் உள்ளிட்ட பல்வேறு அடுக்கு பாதுகாப்புச் சோதனைகள் பயன்படுத்தப்பட்டது.

இன்றைய நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ஆவரேஜ் அளவில் இருந்தது. தேர்வில் வினாக்களுக்கு விடையளிக்க போதிய நேரம் இருந்தது என மாணவர்கள் கூறினர்.

நீட் 2026 தேர்வு மையங்கள் முழுவதும் இன்று 6,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள, கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மையப் பணியாளர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட துணைப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக என்.டி.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு அதிகாரிகள் கணிசமாக அதிகக் கட்டுப்பாட்டுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த என்.டி.ஏ. தனது அறிக்கையின்படி, நீட் 2026-க்கான பெரும்பாலான தேர்வு மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் அமைந்துள்ளதாக தெரிவித்தது.

இன்றைய நீர் முடிவுகள் ஜூன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கவுன்சிலிங் ஜூலை 2026 நடைபெற இருக்கிறது.விவரங்களுக்கு NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.