கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி 29 வது ஆண்டு விழா

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி 29 வது ஆண்டு விழா

கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29 வது ஆண்டு விழா 04-04-2026 இன்று கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவர் அருண் வெங்கட், இயக்குனர், யௌண்டெர் பொட்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், செயற்கை நுண்ணறிவு என்பது அணைத்து தொழில் துறைகளையும் மாற்றக்கூடியது என்றும், ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்த படுகிறது. ஒவ்வொரு மாணவரும் தனது திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும். தெளிவாக படிக்க வேண்டும். முறையாக பயிற்சி செய்யவேண்டும் எனவும் கூறினார்.

மேலும் கல்வியில் சிறந்து தரவரிசையில் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

இந்த ஆண்டு சிறந்த மாணவருக்கான பரிசு மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவரான பாரத், சிறந்த மாணவிக்கான பரிசு மூன்றாம் ஆண்டு உயிர்வேதியியல் துறை மாணவியான மதுமிதா, சிறந்த விளையாட்டு தன்னார்வலர்க்கான பரிசு மூன்றாம் ஆண்டு உயிர்வேதியியல் துறை மாணவரான அரவிந்த், சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்க்கான பரிசு இரண்டாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவரான முத்துமாலையா, சிறந்த ரெட் ரிப்பன் கிளப் தன்னார்வலர்க்கான பரிசு மூன்றாம் ஆண்டு வணிகவியல் (தொழிற்சார் கணக்கியல்) துறை மாணவரான பரத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் கல்லூரியின் 29 வது ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாகத்தினர், நேசனல் பொறியியற் கல்லூரியின் இயக்குநர், முதல்வர், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.