கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29 வது ஆண்டு விளையாட்டு விழா
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறை (2001-2004 Batch) முன்னாள் மாணவர் மற்றும் தமிழ்நாடு வணிக வரி துறையின், துணை வணிக வரி அலுவலர், சிவ பெருமாள்,கலந்து கொண்டு விளையாட்டு விழா பேரூரை ஆற்றி, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அவர் தனது உரையில், விளையாட்டு என்பது உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனவுறுதி, ஒழுக்கம், நேர்மை மற்றும் குழு உணர்வு ஆகியவற்றை வளர்க்கும் ஒரு முக்கியமான துறையாகும். கல்வியுடன் விளையாட்டையும் இணைத்து வளர்த்தால் மாணவர்கள் முழுமையான ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியும். விளையாட்டு நமக்கு தோல்வியையும், வெற்றியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை கற்றுத்தருகிறது என்று கூறினார்.

உடற்கல்வி இயக்குநர் விளையாட்டு துறை ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.. மூன்றாம் ஆண்டு வணிகவியல் (தொழிற்சார் கணக்கியல்) துறை மாணவி ரூபிகா நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாகத்தினர், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், நேசனல் பொறியியற் கல்லூரியின் இயக்குநர்,முதல்வர்,லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை, உடற்கல்வி இயக்குநர் தலைமையில் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்












