திருநெல்வேலி லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் ரோபோ எக்ஸ்போ 2025-26 கண்காட்சி திருவிழா.
திருநெல்வேலி கோடீஸ்வரன் நகரின் எதிரே அமைந்துள்ள லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வைத்து மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில் “ரோபோட்டிக்ஸ் எக்ஸ்போ 2025–26” மற்றும் “ROBO FEST 2026” விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் மரிய சூசை பாரம்பரிய குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் முனைவர்.அகிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த ரோபோட்டிக்ஸ் கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு ரோபோ மாதிரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான திட்டங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.
மாணவர்களின் புதுமை சிந்தனை, அறிவியல் ஆர்வம் மற்றும் தொழில்நுட்ப திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் முதல்வர் ரெனால்டு மற்றும் ரோபோ பள்ளி இயக்குநர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












