தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்களிடம் இந்திய விமானப் பயணிகள் சங்கம் – IAPA ( INDIAN AIR PASSENGERS ASSOCIATION) தலைமை நிர்வாக அமைப்பாளர் எம்பவர் சங்கர் கோரிக்கை
தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு டூட்டிகொரீன் ( TUTICORIN )விமான நிலையம் என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
டூட்டிகொரீன் என்ற பெயரை தூத்துக்குடி என்று அனைத்து மொழிகளிலும் உச்சரிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு தூத்துக்குடி ( THOOTHUKUDI) என்று பெயர் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
மத்திய சிவில் போக்குவரத்து துறை அமைச்சர்
கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை நாடாளுமன்ற விவகாரங்கள்
துறை இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
அதன் பிறகு தூத்துக்குடி
‘EMPOWER INDIA’ – மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு குழு சார்பில் IAPA தலைமை நிர்வாக அமைப்பாளர் எம்பவர் சங்கர் மத்திய அமைச்சர்கள்
கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு மற்றும்
டாக்டர் எல். முருகன் ஆகியோர்களை சந்தித்து விமான நிலையத்தின் செயல்பாடு குறித்து கடிதம் மூலம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்.
கோரிக்கை கடிதத்தின் விபரம்:
தூத்துக்குட விமான நிலையத்திற்கு TUTICORIN to THOOTHUKUDI என்று பெயர் மாற்றம் செய்தமைக்காக எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடி விமானப் பயணிகள் சார்பாகப் பின்வரும் கோரிக்கைகளைத் தங்கள் கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்:
1. தூத்துக்குடி – TCR விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாகத் தயவுசெய்து தரம் உயர்த்தவும்.
2. மும்பை மற்றும் புது தில்லிக்கு புதிய விமானச் சேவைகளைத் தயவுசெய்து அறிமுகப்படுத்தவும்.
3. தூத்துக்குடி விமான நிலையத்தில் சுங்கச் சோதனைகளுக்கான (Customs Clearance) வசதியை ஏற்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தயவுசெய்து அறிவுறுத்தவும்.
4. தூத்துக்குடி விமான நிலையத்தில் உடைமைகள் வைப்பறை (Cloak Room) வசதியை ஏற்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தயவுசெய்து அறிவுறுத்தவும்.
5. தூத்துக்குடி விமான நிலையத்தில் ஓய்வறை (Retiring Room) வசதியை ஏற்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தயவுசெய்து அறிவுறுத்தவும்.
6. தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘Udan Yatri Cafe’ வசதியை ஏற்படுத்த, சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தயவுசெய்து அறிவுறுத்தவும்.
மேற்கூறிய வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் தேவையான அடிப்படைத் தேவைகளாகும்.
எனவே, இவ்விஷயத்தில் தாங்களே நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்; மேலும், தங்கள் சாதகமான பதிலை கூடிய விரைவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
(அ. சங்கர்)
தலைமை நிர்வாக அமைப்பாளர் (CEO) – IAPA
தூத்துக்குடி – என்பதாகும்.
மேற்கண்ட கோரிக்கைகளில் ஒன்றான தூத்துக்குடி முதல் புதுடெல்லி, மும்பை விமான சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் ஐஐடி,மருத்துவம் போன்ற மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.












