கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கில் நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கில் நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கணினி தொழில்நுட்ப போட்டிகள் “ஐ குயிப் – 2026” (i-CUBE) ” 03-03-2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் முன்னிலை வகித்து துவங்கி வைத்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் வரவேற்று, கருத்தரங்கின் மைய கருத்தை பற்றி எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கணினி அறிவியல் துறையில் 2004 முதல் 2007 வரை படித்த முன்னாள் மாணவியும் , சென்னை, ராமாபுரம், எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் சயின்ஸ் அண்ட் ஹுமானிட்டிஸ் துறையின் இணை பேராசிரியையுமான முனைவர்.ரேணுகா தேவி இணையதளம் மூலமாக கலந்து கொண்டு கல்வியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மாணவர்களிடையே கருத்துரையாற்றினார்.

அவர் தனது உரையில் இன்றய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்தும், கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்தும், மாணவர்கள் தங்களை எவ்வாறு வேலை வாய்ப்பிற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கி கூறினார்

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு, வினாடி வினா போட்டி மற்றும் குறும்படம் உருவாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணியினர் பெற்றனர். கணினி அறிவியல் துறை முன்னாள் மாணவரும், துபாய், அஸ்பர் டிஜிட்டல் டெக்னாலஜியின் முதன்மை மென்பொருள் பொறியாளருமான அபிமன்யு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழிகாட்டுதலின் படி கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.