மேல்நிலை முதலாம் ஆண்டு( +1) தேர்வுகள் இன்று தொடங்கியது : 3,576 தேர்வர்கள் ஆப்சென்ட்

மேல்நிலை முதலாம் ஆண்டு( +1) தேர்வுகள் இன்று தொடங்கியது :
3,576 தேர்வர்கள் ஆப்சென்ட்

தமிழகத்தில் இந்த ஆண்டு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வினை இப்போது +2 படிப்பவர்களில் +1 பெயிலானவர்கள் 39,282 பேர்,
அதற்கு முந்தைய ஆண்டுகளில் + 1 பெயிலானவர்கள் 11,675 பேர் என
மொத்தம் 50,957 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HSE (First year)
School private : 39282
Private : 11675
Total 50,957

இதற்காக 2,670 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை முதலாம் ஆண்டு( Arrear ) தேர்வுகள் இன்று (03 – 03 – 2026 ) தொடங்கியது.
முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது.

இதில் மொத்தம் 8,752 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் இன்று தேர்வு எழுதியவர்களில் பள்ளி தேர்வர் 6,640 மற்றும் தனித் தேர்வர் 2,112 ஆக மொத்தம்8,752 பேர் இன்று மொழிப்பாட தேர்வு எழுதினர்.

இன்று முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்விற்கு 3,576 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இதில் பள்ளித் தேர்வர்கள் 3,176 மற்றும் தனித் தேர்வர்கள் 400 பேர் தேர்விற்கு வருகை புரியவில்லை.

மேலும் இன்று நடைபெற்ற தேர்வில் தேர்வு முறைகேட்டில் எந்த மாணவரும் ஈடுபடவில்லை என்று அரசு தேர்வு இயக்குனர் அறிவித்துள்ளார்.

இந்த 2025 – 2026 ம் கல்வி ஆண்டு முதல் 11 ம் வகுப்பு ( பிளஸ் 1 ) பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.