12 – ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் : 8.27 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள்

12 – ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம் :
8.27 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் 8.27 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் படிாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மார்ச் 2 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 26-ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.

முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடை பெறும்.

இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 பேர் எழுத உள்ளனர். இதில் 7,545 பள்ளிகளில் 7 லட்சத்து 99,692 மாணவர்கள், 27,783 தனித்தேர்வர்கள் அடங்குவர். மேலும் 7,465 மாணவர்கள் ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதுள்ளனர்.

பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றொரு வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்றுப் பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல் துறை அதிகாரிகள் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வு மையங்களில் குடிநீர்,இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றம் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கின்றன.

தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக் கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும்.விடைத் தாளில் நீலம் அல்ல கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.

மேலும், விடைத்தாள்களில் எவ்வகை சிறப்புக் குறியீடு,தேர்வெண், பெயர் ஆகியவற்றைக் குறிப்பது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென கூடுதல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆள்மாறாட்டம் செய்வது, துண்டால் அல்லாது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாறுதல் போன்ற ஒழுங்கீன செயல்கள் மாணவர் மீது ஈடுபடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டு அல்லாது நிரந்திரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றம் புகார்களைத் தெரிவிக்க 14417 அல்லது 94983 83075, 94983 83076 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

தேர்வு அட்டவணை:

தேர்வு முடிவுகள்:

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மார்ச் 03 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.