கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேசிய அளவிலான விருது

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேசிய அளவிலான விருது

கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வித் துறையில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக தேசிய அளவிலான “கல்வி சிறப்புத் திறன் விருது – 2026” ஐ பெற்றுள்ளது.

திருச்சியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற சிறப்பான விழாவில், உலகத் தரத்திற்கேற்ப தரமான கல்வியை வழங்கி வரும் சிறந்த கல்வி நிறுவனமாக கல்லூரி தேர்வு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது.

இவ்வுயரிய விருதை கல்லூரியின் முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி பெருமையுடன் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஆறுமுகம் வழங்கினார்.

இந்த விருது, கல்லூரியின் கல்வித் தரம், உயர்ந்த தேர்ச்சி விகிதம், மாணவர்களின் ஒழுக்கம், திறன் மேம்பாடு, தொழில் வழிகாட்டல் மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியில் கல்லூரி அடைந்த முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துடன் சேர்த்து, அவர்களின் வேலைவாய்ப்பு திறன், தொழில் முனைவு மனப்பாங்கு, சமூகப் பொறுப்பு உணர்வு மற்றும் நற்பண்பு வளர்ச்சியிலும் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த சாதனை, கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் பலனாகும் .