தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான புத்தாக்க பயிற்சி
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பும், டீ போர்டு ஆஃப் இந்தியாவும் (தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், இந்திய அரசு) இணைந்து 19.02.2026 அன்று தொழில் முனைவோருக்கானபுத்தாக்க பயிற்சியினை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். டீ போர்டு, இடுக்கி, கேரளாவைச் சேர்ந்த ஆலோசனை அதிகாரி அருண்குமார் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். மேலும், ஊட்டி புட்டீஸ் கஃபே தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் நிர்மல் ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பேச்சாளர்கள் தேயிலைத் துறையில் உள்ள தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.













