நெல்லை ஸ்காட் பொறியியல் கல்லூரி நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் போட்டி :
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரிக்கு இரண்டாம் இடம்
வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் திருநெல்வேலி, ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரி 17.2.2026 அன்று நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான GET SMART 2026 கலைப் போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த இரண்டாம் பரிசாக ரூ. 5000/- பரிசும் ரன்னர் -அப் விருதும் பெற்றுள்ளனர்.

பரிசு விபரங்கள் பின்வருமாறு:
Adzap – முதல் பரிசு
குழு நடனம் – முதல் பரிசு
கார்ப்பரேட் வாக் – இரண்டாம் பரிசு
முகத்தில் ஓவியம் வரைதல் – இரண்டாம் பரிசு
ரங்கோலி – இரண்டாம் பரிசு
குழு பாடல் – மூன்றாம் பரிசு

இவ்வெற்றிக்கு காரணமான இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஜாக்சன், இளைஞர் நலத்துறை உறுப்பினர்கள் முனைவர்.சந்திரா, முனைவர். இர்வின், முனைவர்.சுதன், பொன் கனகா மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டினார்.













