தஞ்சை பாவநாசம் ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தஞ்சை பாவநாசம் ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தஞ்சாவூர் மாவட்டம், பாவநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக நடத்தப்பட்ட 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவரும் கலைப்புல தலைவருமாகிய பேராசிரியர் திருமாவளவன் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். மணிராஜ் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
கல்லூரி துணை முதல்வர் மதன் மோகன்,  அறிவியல் பிரிவு தலைவர் முனைவர். அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சிக்கான நோக்கத்தையும், இதன் பயன்களையும் பேராசிரியர் ஜெகன் விளக்கி பேசினார்.