தூத்துக்குடி வ.உ. சி.கல்வியியல் கல்லூரியில் சமூக ஜனநாயகக் கையேடு புத்தக வெளியீட்டு விழா : அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்

தூத்துக்குடி வ.உ. சி.கல்வியியல் கல்லூரியில் சமூக ஜனநாயகக் கையேடு புத்தக வெளியீட்டு விழா :
அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி பொன்விழா அரங்கில் பிப்ரவரி 14 , 2026 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சமூக ஜனநாயகக் கையேடு நூலை
அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட., வ.உ.சி. கல்வியியல் கல்லூரி செயலர் A.P.C.V. சண்முகம் அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார்கள்.

தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரி பொன்விழா அரங்கில் சமூக ஜனநாயகக் கையேடு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து
பொதுப்பள்ளி கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தனது நோக்க உரையில், பாகுபாடுகள், வன்முறைகள் இல்லாத பாதுகாப்பான வளாகங்களாக கல்வி நிறுவனங்கள் செயல்பட, மாணவர்களுக்கு சகோதரத்துவத்தை உணரச் செய்ய, பள்ளிப் பாடத்திட்டத்தின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டில் அறிவியல் பூர்வமான கருத்துக்களை அறிந்துக் கொள்ள செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அதற்கான செயல்பாடுகளைக் கொண்ட சமூக ஜனநாயகக் கையேடு நூலை தூத்துக்குடியில் வ. உ. சி. கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை துறை அமைச்சர் கீதா ஜீவன் புத்தகத்தை வெளியிட்டு விழா பேருரை நிகழ்த்தினார்.

 

அவர் தனது பேருரையில், இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை கூறியதோடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இப் புத்தகத்தின் அறம் சார்ந்த கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கல்லூரிச் செயலாளர் ஏ.பி.சி.வீ.சண்முகம் அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தனது சிறப்புரையில் ஆசிரியர்களும் மாணவர்களும் அன்பு அறிவு அறம் சார் விழுமியங்கள் கொண்டவர்களாகவும் சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ஆசிரியர் பிச்சைக்கனி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் சையது இப்ராஹிம் நன்றியுரைக்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையும் வ.உ. சி.கல்வியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இப்புத்தக வெளியீட்டு விழாவை கல்லூரி முதல்வர் தலைமையில் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். பேராசிரியர் பிரியா விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.