தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் நாளை சமூக ஜனநாயகக் கையேடு நூலை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிடுகிறார்

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் நாளை சமூக ஜனநாயகக் கையேடு நூலை
அமைச்சர் கீதா ஜீவன் வெளியிடுகிறார்

சனிக்கிழமை பிப்ரவரி 14 மாலை 4 மணி முதல் 5.45 மணி வரை தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரி பொன்விழா அரங்கில் சமூக ஜனநாயகக் கையேடு நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

பாகுபாடுகள், வன்முறைகள் இல்லாத பாதுகாப்பான வளாகங்களாக நமது பள்ளிகள் விளங்கிட, குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு சகோதரத்துவத்தை உணரச் செய்ய, பள்ளிப் பாடத்திட்டத்தின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டில் அறிவியல் பூர்வமான கருத்துக்களை அறிந்துக் கொள்ள செய்ய வேண்டும்.

அதற்கான செயல்பாடுகளைக் கொண்ட சமூக ஜனநாயகக் கையேடு நூலை  தூத்துக்குடியில் வ. உ. சி. கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் தலைமையில் நடக்கும் நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட கல்லூரிச் செயலாளர் ஏ.பி.சி.வீ.சண்முகம் பெற்றுக் கொள்கிறார்.

தூத்துக்குடியின் விடுதலைப் போரிட்ட பங்களிப்பின் வாழும் கல்வியியல் அடையாளமாக திகழும் வ உ சி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பொன்விழா அரங்கில் நடக்கும் நிகழ்விற்கு ஆசிரியர், மாணவர் இயக்கத் தோழர்கள் பங்கேற்று சமூகத்தை ஜனநாயகப்படுத்த மக்களுடன் உரையாடல் தொடர்ந்து நிகழத்திட தங்களின் மேலான ஆதரவை நல்கிட தோழமையுடன் அழைக்கிறார்

பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.