தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உள்ளகப் பாடத்திட்டம் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உள்ளகப் பாடத்திட்டம் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது

உள்ளகப் பாடத்திட்டம் திட்டமிடல் கூட்டம் (In-house curriculum planning meeting) தூத்துக்குடி வ உ சி கல்வியியல் கல்லூரி கூட்ட அரங்கில் 03.02.2026 அன்று நடைபெற்றது.

மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகளாக(value added courses) இந்த ஆண்டு இளங்கலை கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு EduTech 360*, Yoga for Health மற்றும் நாட்டுப்புற கலைகள் போன்ற பாடப்பிரிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பாடத் திட்டங்கள் வல்லுனர் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இக்குழுவில் பேராசிரியர் முனைவர் செட்ரிக், வ. உ.சிதம்பரம் கல்லூரி, பேராசிரியர் முனைவர். அனிஷ்டா, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி, தோற்பாவை கலைஞர் முது கலைமாமணி ராஜு மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்துகொண்டு, தரம் சார் பாடத்திட்டம் தயாரிக்க தங்களுடைய ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.