தஞ்சாவூர் மாவட்டம் ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் புதிய ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் புதிய ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், பாவநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் புதிய ரோட்ராக்ட் சங்கத்தின் பதவி ஏற்பு விழா (தொடக்க விழா) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். மணிராஜ் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.

ரோட்ராக்ட் சங்கத்தின் ஆதரவுச் சங்கமாக (Sponsoring Club) செயல்படும் ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் மிட் டவுன் சார்பில் தலைவர் சுரேஷ் மற்றும் செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார்.உதவி ஆளுநர், தஞ்சாவூர் மண்டலம், தமிழ்செல்வன், கல்லூரி துணை முதல்வர் மதன் மோகன், தேர்வு நெறியாளர் முனைவர். சந்திரன், கலைப் பிரிவு தலைவர் பேராசிரியர் திருமாவளவன், அறிவியல் பிரிவு தலைவர் முனைவர். அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 350 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகன் மேற்கொண்டிருந்தார்.