தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் டாக்டர். அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உரை நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் டாக்டர். அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உரை நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, கல்லூரி நிறுவனத்தின் புதுமை மன்றத்துடன் (Institution’s Innovation Council) இணைந்து, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை 30.01.2026 அன்று ஒரு சிறப்பு உரை நிகழ்வை ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் இளநிலை முதலாம் ஆண்டு இயற்பியல் மாணவி தீபா வரவேற்புரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர். ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் சாயர்புரம், போப் கல்லூரி, இயற்பியல் துறை, இணைப் பேராசிரியர் டாக்டர் ஜீவா ராணி தங்கம், சரியான செயல்களின் மூலம் வாழ்க்கையை உயர்த்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், டாக்டர் கலாமின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய திருப்புமுனைகள் எவ்வாறு அவரை ஒரு விஞ்ஞானி, ஆசிரியர் மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய தலைவராக உருவாக்கின என்பதையும் விளக்கினார். இந்த உரை, மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்வில் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் புதுமை உணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்கமளித்தது.

இளநிலை இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி ஜெமி நன்றி தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு வழிகாட்டுதலலில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, இந்த அறிவூட்டும் நிகழ்ச்சியால் பெரிதும் பயனடைந்தனர்.