170 ஆண்டுகளை கடந்த தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

170 ஆண்டுகளை கடந்த தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

தூத்துக்குடி, SAV மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26.01.2026 அன்று 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இதயநோய் நிபுணர், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை தலைமை மருத்துவர் நீலாம்புஜன் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.

தலைமை விருந்தினர் தனது உரையில், “இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளியில் குடியரசுதின கொண்டாட்டத்தில் பங்குகொண்டது தனக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு” எனக்குறிப்பிட்டு மாணவர்களை வாழ்த்தி, இக் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குக் பரிசுகள் வழங்கினார்.

விழாவிற்கு SAV மேல்நிலைப்பள்ளி செயலாளர், வழக்கறிஞர் சொர்ணலதா தலைமை தாங்கினார்.

குடியரசு தின விழா ஏற்பாட்டினை பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன மற்றும் ஆசிரியர்கள் செய்தனர் .