சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் NTPL தொழிற்சாலையை பார்வையிட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக, தூத்துக்குடியில் அமைந்துள்ள NTPL தொழிற்சாலைக்கு 23-1-26 அன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பார்வையிட சென்று இருந்தனர்.
தொழிற்சாலையில் உள்ள வல்லுநர்கள், மின்னணுவியலில் செயல்பாட்டு முறைகளை விவரித்தார்கள். மேலும் தொழிற்சாலையின் மேலாண்மை, அடிப்படை தன்மை மற்றும் இயந்திரங்களின் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய NTPL நிறுவனத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்.












