மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதலிடம்
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 27.11.2025 நடந்த தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு இளங்கலை கல்வியியல் ஆங்கிலத் துறையைச் சார்ந்த மாணவி வசந்தகுமாரி “காந்தியடிகளின் மத நல்லிணக்கம்” என்ற தலைப்பில் பேசி முதல் பரிசு ரூபாய் 5000மும் பாராட்டுச் சான்றிதளும் பெற்றுள்ளார்.

மேலும் 28.11.2025 அன்று முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கல்லூரியின் கணிதத்துறையைச் சார்ந்த மாணவி நூர்நிஸா “நேருவின் உலக அமைதிக்கான தொண்டு” என்ற தலைப்பில் பேசி இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மற்றும் பாராட்டுச் சான்றிதளும் வென்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.













