நாளை ஜனவரி 24 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் : காரணம் தெரிவிக்காமல் வேலை நாளாக அறிவித்தது மாவட்ட கல்வி நிர்வாகம்

நாளை ஜனவரி 24 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் :
காரணம் தெரிவிக்காமல் வேலை நாளாக அறிவித்தது மாவட்ட கல்வி நிர்வாகம்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இம்மாதம் மேலும் 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அதன்படி ஜன.24 (சனி), ஜன.25 (ஞாயிறு), ஜன.26 ( திங்கள் – குடியரசு தினம்) ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜன.24ஆம் தேதி சனிக்கிழமை சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர், மற்றும் தென்காசி உட்பட ஒரு சில மாவட்டங்களில் மழை நேரங்களில் விடுமுறை அளிக்கப்பட்டநை ஈடு செய்ய பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி சுற்றரிக்கையாக தூத்துக்குடி, கோவில்பட்டி தொடக்கக் கல்வி,இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர்கள்,அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேலும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு பள்ளி வேலை நாளுக்கான காரணம் குறிப்பிடாமல் அனுப்பியுள்ளார்.

ஆனால் ஜனவரி 26 குடியரசு தினம் திங்கள்கிழமை வருவதனால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் என்பதனால் மாணவர்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்று வரலாம். ஆகவே 24 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நாளை பள்ளிகளுக்கு அறிவித்த வேலை நாளை மற்றொரு சனிக்கிழமை வைத்து விடுமுறையை ஈடுசெய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசும் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு 4 நாட்கள் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜனவரி 23,24 ம் தேதிகளில் 955 சிறப்பு பேருந்துகளும், ஜனவரி 26 அன்று 800 சிறப்பு பேருநதுகளும் இயங்கும் என்று அறிவித்துள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைஜனவரி 24 சனிக்கிழமை காரணம் தெரிவிக்காமல் அறிவித்துள்ள பள்ளி வேலை நாளை மற்றொரு சனிக்கிழமை வைக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணையில் 24 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை தினமாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.