தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 11 வது பொங்கல் விழா கொண்டாட்டம் : களை கட்டியது கல்லூரி வளாகம்
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கல்லூரி தொடங்கப்பட்டு 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தை ஒட்டி 11 வது பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இது பற்றி கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாக அவர்கள் கூறியதாவது :
கடந்த 75 ஆண்டுகளாக கல்வியை சேவையாக மட்டும் வழங்கி வரும் தூத்துக்குடி வ உ சிதம்பரம் கல்லூரியின் பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழா,இந்த ஆண்டு செயலாளர் ஐயா. ஏ.பி. சி.வீ.சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படி பவள விழா சிறப்பு பொங்கலாக கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு துறையும் தத்தம் துறை மாணவ மாணவியரோடு பொங்கலிட்டு, உறியடி, தட்டாங்கல் உள்ளிட்ட தமிழர் மரபு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பித்தார்கள். கல்லூரியின் சார்பாக கல்லூரி அலுவலகத்தார் பொங்கலிட்டு சிறப்பித்தார்கள். கல்லூரியின் பவள விழாவை நினைவூட்டும் பொருட்டு வைக்கப்பட்ட, பவள விழா இலச்சினை (logo), பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வுகள் பற்றிய சுய புகைப்பட அரங்கம்(selfie booth ), தமிழர் மரபை போற்றும் மாட்டு வண்டி ஆகியவையோடு மாணவ மாணவியர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு துறையின் சார்பாக பொங்கல் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.













