தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா :
210 மாணவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பட்டங்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா 07.01.2026 இன்று காலை 11.00மணியளவில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வணிக நிர்வாகவியல் துறை, வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறை, ஆங்கில இலக்கியத்துறை, கணிதவியல் துறை, வரலாற்றுத்துறை உட்பட 210 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் வரவேற்புரை மற்றும் கடந்த ஆண்டுக்கான அறிக்கையை வாசித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சுதன்ஹீலர்,சுதா சுதன், மருத்துவர்.மகிழ் ஜான் சந்தோஷ், மருத்துவர். கீர்த்தனா மகிழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், உடன் வந்த பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.













