தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் சர்வசமய வழிபாடு சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.

பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவினை இனம், மொழி, மதம் சார்பற்ற விழாவாக கொண்டாடும் நோக்கில் சர்வ சமய வழிபாடு நடத்தப்பட்டது.

வழிபாட்டில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஜெயாசண்முகம் மற்றும் சாரண, சாரணிய பொறுப்பாசிரியைகள் உதயம்மாள், மணிமேகலை, கிங்ஸ்லின் சோபியா, ஜெபமாலை, செல்வபொன்னரசி ஆகியோர் பங்கு வகித்தனர்.

சர்வ சமய வழிபாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் ஆகிய மதங்களுக்குரிய வழிபாடுகள் சாரண, சாரணியர்களால் செய்யப்பட்டது மற்றும் ஏனைய சாரண, சாரணியர்கள், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் பிரியங்கா செய்திருந்தார்.