தூத்துக்குடி மட்டக்கடை – தட்டார் தெருவில் நாளை மாபெரும் இலவச மருத்துவ முகாம் :
கல்வித் தந்தை ஏ. பி. சி. வீ. சொக்கலிங்கம் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடியில் நாளை 21 – 12-2025 ஞாயிற்றுக்கிழமை எஸ்.ஆர்.இருதய சிகிச்சை மையம் மற்றும் புனித அக்குயினாஸ் நூலகம் இணைந்து மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாமை நடத்த உள்ளது.
பிரபல மருத்துவர் சகாய பிரான்சிஸ் அகிஸ்டன்M.B.B.S., M.D., ( Gen. Med.) D.M.( Cardiology ) பொது மருத்துவம் மற்றும் இருதய சிகிச்சை மருத்துவர் பங்கு பெற்று, பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
மருத்துவ முகாம் தூத்துக்குடி மட்டக்கடை கடை அருகில் உள்ள தட்டார் தெருவில் அமைந்துள்ள புனித அக்குயினாஸ் நூலகத்தில் வைத்து நாளை 21 -12 -2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறும்.
மருத்துவ முகாமை வ. உ. சி.கல்விக் குழும செயலாளர்,கல்வித் தந்தை ஏபிசி.வீ. சொக்கலிங்கம் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இம் முகாமில்
1.இரத்த அழுத்த பரிசோதனை ( BP ) ,
2.இசிஜி பரிசோதனை ( ECG )
3.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ( Random Blood Sugar ) பரிசோதனை
4.பிறவி இருதய குறைபாடு பற்றிய ஆலோசனை மற்றும்
5.இருதய மருத்துவரின் ஆலோசனை
ஆகியவற்றினை பொதுமக்களுக்கு மருத்துவர் சகாய பிரான்சிஸ் அகிஸ்டன் M.B.B.S., M.D., ( Gen. Med.) D. M. ( Cardiology ) வழங்குகிறார்.
பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மருத்துவ முகாமிற்கு முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.👇👇👇👇👇
76670 09370
94434 04763












