கனமழை காரணமாக நாளை நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
:
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குமரி கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடையும் என்று மாநில வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.
மேலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நாளை 24 – 11 – 2025 திங்கள்கிழமை தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.












