பெங்களூருவில் நடைபெற்ற நான்காவது தேசிய சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சாம்பியன்
தூத்துக்குடி நகர் புறம் வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் உலக கிருத்திக்ஷன் 16/11/2025 பெங்களூருவில் நடைபெற்ற நான்காவது தேசிய சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு இரட்டைக் கொம்பு (Double Stick Rotation) போட்டியில் முதலிடம் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசை பெற்றுள்ளார்.
இன்று மாணவன் உலக கிருத்திஷனை பள்ளியின் தலைமையாசிரியர் தங்கமணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டிப் பரிசு வழங்கினர்.












