டிசம்பர் 2025 இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உண்மையான சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

டிசம்பர் 2025 இறுதிக்குள் பள்ளிக்
கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உண்மையான சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

பள்ளிக்கல்வித் துறையில் ஊழியர்கள், ஆசிரியர்கள் சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் அமர்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

பள்ளிக்கல்வித் துறையில் ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் கல்விப் பட்டய சான்றுக்கான உண்மைத்தன்மை பெறாமல் உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

எனவே 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மை தன்மை பெற்று இருத்தல் அவசியம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2025 க்குள் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உண்மை தன்மை பெற்றதை அலுவலகத்திற்கு அறிக்கையாக தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர்,
பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை.6

மேற்கண்ட விபரத்தை சுற்றரிக்கையாகஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பியுள்ளது.