மாணவர்களின் லட்சியக் கனவை நிறைவேற்றிய “வானமே எல்லை” விமான பயணம் : மாணவர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

மாணவர்களின் லட்சியக் கனவை நிறைவேற்றிய “வானமே எல்லை” விமான பயணம் :
மாணவர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வானமே எல்லை என்ற லட்சிய கனவை நிறைவேற்றும் வகையில் ரெயின் டிராப்ஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 பள்ளி குழந்தைகளை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பள்ளிகள் மற்றும் குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த பயணத்தில் மாணவர்களுடன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார்.

சென்னையில் செயல்பட்டு வருகிறது ரெயின் டிராப்ஸ் தொண்டு நிறுவனம். இந்த தொண்டு நிறுவனம் வானமே எல்லை என்ற பெயரில் பல்வேறு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் உதவிகளை மாணவர்கள் முதல் அனைவருக்கும் செய்து வருகிறது

இதன் ஒரு பகுதியாக இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ரெயின் ட்ராப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வானமே எல்லை என்ற லட்சிய கனவை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கனவை நிறைவேற்றும் வகையில் சென்னையைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 5 ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கக்கூடிய 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து முதல் முறையாக அவர்களுடைய விமான கனவை நிறைவேற்றும் வகையில் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

இந்த மாணவர்களின் விமான பயணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர்களுக்கு வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த மாணவ மாணவிகள் அனைவரும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின விழா சிறப்பு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பின்னர் இரவு செங்கோட்டை பார்டர் பகுதியில் அமைந்துள்ள பிரபல புரோட்டா கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

மேலும் நாளை காலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்கும் மாணவ மாணவிகள் குற்றாலம் அருவி மற்றும் தீம் பார்க் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கின்றனர்

இந்தப் பயணம் தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் சென்னையில் இருக்கும் தாங்கள் விமானம் பறப்பதை தான் நொடிக்கு நொடி பார்த்துள்ளோம் ஆனால் விமானத்தில் சென்ற அனுபவம் கிடையாது. முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விமானத்தில் வரும்போது மேகக் கூட்டங்கள் அருகே இருந்ததை பார்த்ததும் மேலும் விமான பயணத்தின் போது தங்களுக்கு பறவை போல ரெக்கை கட்டி பறப்பது போன்று பரவசம் ஏற்பட்டதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

குழந்தைகள் தினத்தன்று தாங்கள் விமானத்தில் பயணம் செய்தது தங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாதது எனவும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

இந்த வானமே எல்லை இன்ப சுற்றுலாவில் ஒரு திருநங்கை மாணவர் மற்றும் ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவர் என 30 குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். இது இன்ப சுற்றுலா மட்டுமல்லாமல் ஒவ்வொரு குழந்தைகளும் கனவு காணவும் அதன் மூலம் அவர்கள் உயரே பறக்கவும் உரிமை உண்டு என்ற தன்னம்பிக்கையை மாணவர்கள் மனதில் உருவாக்கவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் ரெயின் டிராப்ஸ் நல்லெண்ண தூதர் ஏ ஆர் ரஹானா, ரெயின் டிராப்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழும தலைவர் டாக்டர். பிஜேபி சந்தோசம்,மாநிலத் திட்ட ஆணை உறுப்பினர் டாக்டர். சுல்தான் அகமது இஸ்மாயில், ஆனந்தம் நிறுவனர் பகிரதி இராமமூர்த்தி, ஆர்கானிக் உணவு நிபுணர் மண்வாசனை மேனகா மற்றும் ரெயின் டிராப்ஸ் குழுவினர் பங்கேற்றனர்.