அனவரதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 74 லட்சம் முதலீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி : சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் அனவரதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 74 லட்சம் முதலீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை
*ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் மூலம் பள்ளியில் மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கெனிஷா,
பள்ளிதத் தலைமை ஆசிரியர்
திரவியம்,உதவி பொறியாளர்கள்
மாரியப்பன், தளவாய்,
வருவாய் ஆய்வாளர் மாதவன்,
கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து,
ஊராட்சி செயலர் முத்து
மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













